கண்டி மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் அனேகமான பஸ்களில் மிகுதிப் பணம் வழங்குவதில் பஸ் நடத்துநர்கள் மோசடி செய்வதாக பயணிகள் பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த மோசடிகள் இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்களில் அடிக்கடி இடம்பெறுகின்றன.
பொதுவாக 77 ரூபாய்க்கான டிக்கட்டை வழங்கி 80 ரூபா அறவிடுபவர்களும் உண்டு. அதேபோன்று 123 ரூபாய்க்கு 130 அறவிடுபவர்களும் உண்டு.
இவ்வாறு பொதுவாக சகல பயணிகளிடமும் ஏதோ ஒரு தொகையை கையாடல் செய்து, ஒரு நாளைக்கு பெருந்தொகை மோசடிகள் இடம்பெறுவதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

