நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுட்டிக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையை வழிபடுகின்றனர். அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியை வழிபடுகின்றனர். இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளை வழிபடுகின்றனர்.
குறித்த நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதனையொட்டி மலையக பாடசாலைகளிலும் ஆலயங்களில் ஆரம்ப நிகழ்வு பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
அந்தவகையில் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திலும் நவராத்திரி விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.

