வாகரையில் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வான பரிசளிப்பு விழா நிகழ்வு

உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வான பரிசளிப்பு விழா நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் தலைமையில் வாகரை கலாச்சார மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு 2025 செப்ரம்பர் 15-21 ஆம் திகதி வரை ‘வளமான நாடும் அழகான வாழ்க்கையும்’ எனும் எண்ணக் கருவில் மறுமலர்ச்சி நகரம் எனும் தொணிப் பொருளில் உள்ளுராட்சி வாரம் தொடர்பான பல்வேறு வகையான நிகழ்வுகள் வாகரை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அவ் நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள் பாடசாலை ரீதியாக தெரிவு செய்யப்பட்டு அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.அத்தடன் கிராமிய விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி க.அமலினி மற்றும் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி எம்.ஆர்.எவ்.றிப்கா ஷபீன் ஆகியோர் மற்றும் வாரை பிரதேச இராணுவ தளபதி,விசேட அதிரடி படை பொறுப்பதிகாரி,பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *