கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஸ்ட பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

வருடாந்த பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் தசாப்த விழாவும் கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஸ்ட பாடசாலை வாழைச்சேனையில் பாடசாலை அதிபர் சி. சிவநேசராசா தலைமையில் நேற்று(22) நடைபெற்றது.

கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான என். நேசகஜேந்திரன் மற்றும் ஏ. ஜெயக்குமணன், ஏ. தயாழசீலன் கலந்து கொண்டனர்.

ஆசிரிய ஆலோசகர் திருமதி சௌ. அருளேந்திரன், திருமதி நி.பிரகலாதன், கிராம சேவகர் ஞ.யோன்போல் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பாடசாலை அதிபர்கள், ஆலயத் தலைவர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழகத்தினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது பாடசாலையின் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்த நடைபவணியானது பிரதேசத்தினை சுற்றிவந்தது.

பாடசாலை மாணவர்களால் பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அதிதிகள் மலர்க் கொத்து வழங்கி வரவேற்கப்பட்டனர். பின்னர் தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது பாடசாலையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்ட பாடசாலை அதிபர்கள், கௌரவ அதிதிகளாக கலந்து கொண்ட கல்வி அதிகாரிகள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *