கல்முனையில் டிப்பர் வாகனம் மோதிய விபத்தில் குழந்தை உயிரிழப்பு

அம்பாறை , கல்முனை சந்தியிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் வீதியோரத்தில் நடந்து சென்ற குழந்தை மற்றும் பெண்ணொருவர் மீது மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது.

 

இந்த விபத்து நேற்று(22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

விபத்தில் குழந்தையும் பெண்ணும் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.

 

உஹன பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும், இந்த விபத்தில் தொடர்புடைய டிப்பர் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டடுள்ளதோடு, அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *