மட்/ மம/ ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக கடமையேற்றுள்ள திருமதி. மஹ்ஜூத் ஜெஸீலா முகம்மட் ஹாரிஸ்க்கு ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அல்ஹாஜ். எம். எஸ். நழீம் நேரில் சென்று தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு குறித்த பாடசாலையின் கல்வி வளர்ச்சி தொடர்பிலும் தாம் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இப்பாடசாலை எப்போதும் ஏறாவூர் நகர சபையின் நேயமிகு பாடசாலையாக இருக்கும் என்பதுடன் தவிசாளரின் “சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி” எனும் தொனிப்பொருளிலான எண்ணக்கருவில் இடம்பெற்ற சிரமதானப் பணிகளில் அதிக பங்களிப்பு செலுத்தியதோடு மட்டுமல்லாமல் பாடசாலை வளாகத்திற்குள் கழிவுகளை உருவாக்காமல் புதிய சரித்திரம் படைத்தமைக்காக அவரின் கரங்களால் “சீரோ வேஸ்ட் ஹீரோஸ்” எனும் உயரிய விருதினை வென்றெடுத்த பெருமைமிகு மாணவர்
மற்றும் ஆசிரியர் குழாம் சூழ்ந்த பாடசாலை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
அத்தோடு கடமை பொறுப்பேற்ற அதிபரை கௌரவிக்கும் முகமாக தவிசாளரால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.
தற்போது புதிய அதிபராகக் கடமையேற்றுள்ள திருமதி. மஹ்ஜூத் ஜெஸீலா முகம்மட் ஹாரிஸ் குறித்த பாடசாலையின் பெருமைமிகு பழைய மாணவி என்பதுடன், ஏறாவூர் ஈன்றெடுத்த முதலாவது பெண் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


