சமுர்த்தி ஆரோக்கியா உணவகத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கள விஜயம்

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சந்திக்கருகாமையில் ஏ9 வீதியில் அமைந்துள்ள சமுர்த்தி ” ஆரோக்கியா” உள்ளூர் உற்பத்தி மற்றும் உள்ளூர் தொழில் முனைவோரின் உணவகத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ. உமாமகேஸ்வரன் களவிஜயம் ஒன்றை நேற்று(24) மேற்கொண்டார்.
இதன்போது குறித்த உணவகத்தின் குறைநிறைகளையும் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இந்த உணவகத்தின் அடிப்படைத் தேவைகளை மேலும் விரிவுபடுத்திடும் நோக்கில் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு.இ. நிசாந்தன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், குறித்த பகுதிக்கான கிராம அலுவலகர் முதலானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *