ஜனாதிபதி ஊழலை ஒழிப்பதாக குறிப்பிட்டாலும் நாட்டிலே பாதுகாப்பு பிரதியமைச்சர் முன்னாள் இராணுவ அதிகாரியாக காணப்படுவதால் தமிழ் மக்களுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் புளியம்பொக்கணை கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தினருக்கு பாராளுமன்ற உறுப்பினரின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் 1மில்லியன் ரூபா பொறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


