யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, வீடொன்றின் மீது பனை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது, குறித்த வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.