யாழில் வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் கூடுகள் கையளிக்கும் நிகழ்வு

வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக, வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் 18 கூடுகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று(28) மு. ப 09.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் வைத்து சேவ் அ லைப் நிறுனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. இராகுலனால் கையளிக்கப்பட்டது.

மாவட்ட செயலகம் அதனை அண்டிய பகுதியில் வைப்பதற்காக 03 கூடுகளும், மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தலா ஒன்று வீதம் வைப்பதற்காக 15 கூடுகளுமாக 18 கூடுகள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், வெற்றுப் போத்தல்களால் கூடு நிரம்பியவுடன் அதனை குறித்த நிறுவனம் மீள சுழற்சிக்காக எடுத்துச் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ் கையளிப்பு நிகழ்வில் பிரதம பொறியியலாளர் திரு. க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தா்சினி மற்றும் நிறுவன தொழில் நுட்ப முகாமையாளர் திரு. ம. கீதானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *