கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட எம்.பி.சீ.எஸ்.வீதியில் உள்ள லொத்தர் சீட்டுக் கடையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த லொத்தர் சீட்டிழுப்பு மாணவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனும் அச்சநிலை தோன்றுகிறது.
இதனால் அந்த கடையை அவ்விடத்திலுருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் கபூர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகாரனின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

