கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு; எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் ரூ. 97 மில்லியனுக்கு அருகிலான பெறுமதியுடைய சொத்துக்கள் மற்றும் உடைமைகளைச் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று(01) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *