மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வானது மட்டக்களப்பு 243 வது படைப்பிரிவின் பிரிகேடியர் பிரதீப் களுபானவின் கட்டளையின் கீழ் 11 ஆவது சிங்க படையணியினரின் ஏற்பாட்டில் இன்று(01) அவ்வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 243 வது படைப்பிரிவின் பிரிகேடியர் பிரதீப் களுபான பிரதம அதிதியாக கலந்து நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.
வித்தியாலய மாணவ மாணவியரால் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், 11 ஆவது சிங்க படையணியினரினால் அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 243 வது படைப்பிரிவின் பிரிகேடியர் லுதினல் கேணல் சந்திரகுமார, மட்டக்களப்பு வலய சிங்கள ஆசிரிய ஆலோசகர் திரு. கோகுலதாசன், வலய ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் திரு.ருதேசன், ஆஞ்சனேயர் குரூப் ஒப் கம்பெனி சார்பாக திரு.ஏ நிரோசன், இராணுவ அதிகாரிகள், வித்தியாலய அதிபர் ரதி சந்திரிக்கா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


