தேர்தல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

தேர்தல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம். பி. எம் . சுபியான் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சட்டவிரோதமான முறையில் கட்சி அலுவலகங்கள் அமைத்தல் ஒன்று கூடல்கள் ஐந்து பேருக்கு அதிகமாக வீடு வீடாக பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.

 

இவ்வாறான தேர்தல் விதிமுறைக்கு எதிராக யாரேனும் செயல்பட்டால் பொதுமக்கள் எமது முறைப்பாட்டு அலுவலகத்தில் தெரிவிக்க முடியும்.

 

சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரச்சாரங்களை தேர்தல் திணைக்களம் கண்காணித்து வருகின்றது. எனவே இதனை கடைப்பிடிக்க தவறியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *