மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த மாணிக்கப்பொடி குகன்தராஜா, தொடர்ச்சியாக 5 மணித்தியாலம் 5 நிமிடங்கள் சிரசாசனம் (மூச்சுப் பயிற்சியுடன் தலைகீழாக நின்ற யோகாசனம்) செய்து சாதனை படைத்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான இவர், ஓய்வு பெற்ற உப தபால் அதிபர் ஆவார்.
சோழன் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம்பிடித்தமையினால் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் இவர் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


