வாகரையில் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தினால் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வாகரை வம்மிவட்டவான் பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி கா.அமிலினி தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

அதிதிகளாக வாகரை பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன், நிருவாக உத்தியோகத்தர் வி. சிவரஞ்சன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ. சுதர்சன், சமுர்த்தி முகாமையாளர் திருமதி கலைவாணி கவேந்திரன், வாகரை பொலிஸ் பரிசோதகர் ஏக்கநாயக்க ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர்களுக்கான பல்வேறு  கிராமிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வெற்றிபெற்றவர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் முதியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *