சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டு அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட சமூக ஊடகம், மனித உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் சமூக ஊடக அறிக்கை 2.0 என்னும் கருத்தரங்கு குறித்த அமைப்பால் நேற்று(04) கல்லடி கிரீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கில் சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு மற்றும் சமூகத்தில் அதன் வளர்ந்து வரும் செல்வாக்கு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டதுடன் தற்போது, இணையமும் சமூக ஊடகங்களும் சமூகத்தில் அதிக சக்தி வாய்ந்த தளங்களாக மாறியுள்ளன.
அவை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஒரு சக்தியாக செயல்பட முடியும், ஆனால் சில நேரங்களில் அவை மோசடி, தவறான தகவல் பரப்பல், வெறுப்பு பிரச்சாரம் மற்றும் நீதியற்ற அடக்குமுறைக்கு பயன்படும் கருவிகளாகவும் மாறக்கூடும்.
அத்துடன் சமூக ஊடகத் தளங்களில் உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மறையான ஈடுபாட்டுக் கலாசாரத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தப்பட்டது.


