யாழ் – குருநகரில் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் 51 வயதான ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

எட்டு கிராம் ஹெரோயின், 16 கிராம் ஐஸ், 120 போதை மாத்திரைகள் என்பனவும் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணத்தொகையும் குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *