வவுனியா – இராசேந்திரம் குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று நேற்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் எனும் 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி மூன்று இளைஞர்கள் குறித்த மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இதன்போது, மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, இராசேந்திரகுளம் பாடசாலைக்கு முன்பாகவுள்ள பேருந்துத் தரிப்பிடத்துடன் மோதியுள்ளது.
இதையடுத்தே, மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

