முல்லைத்தீவில் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் பகுதியில் வைத்து கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினரால் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இன்று(07) கைது செய்துள்ளனர்.

1993 ஆம் ஆண்டு பிறந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பேசாலை மன்னார் மாவட்டத்தினை சேர்ந்தவர். இவர் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியுள்ள நிலையில் தற்போது வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றார்.

இவர் தற்போது பொலிஸ் சேவையினை மக்களுக்காக வழங்கிவருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்தபோது இவரை சந்தேகத்தில் சோதனை செய்த சிறப்பு அதிரடிப்படையினர் முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். உடமையில் 100 கிராம் ஐஸ் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை மாங்குளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *