திருகோணமலை மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள சுற்றுலாவுக்குப் பொருத்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க இன்று(07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
திருகோணமலை பகுதியிலுள்ள மார்பள் பீச் மற்றும் ஸ்வீட் பே ஆகிய பகுதிகளை மையப்படுத்திய அரசாங்கத்தின் சுற்றுலாத்திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“யுத்த காலத்தில் பல காணிகளில் முப்படை வசமிருந்த நிலையில், அவை படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுவீகரித்துள்ள ஸ்வீட் பே காணி தொடர்பில் வழக்கு உள்ளது. அது தீர்க்கப்பட்டவுடன் விருப்பக் கோரல்கள் அழைக்கப்பட்டு, காணிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.
அதேநேரம், குறித்த சூழலுக்குப் பொருத்தமான நிலையான அபிருத்திக்கு ஏற்றவகையிலான திட்டங்களுக்காகவும் அந்த காணிகளை விடுவிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

