வீர மரணம் அடைந்த போர் வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் நிகழ்வு

இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வீர மரணம் அடைந்த போர் வீரர்களின் மகத்தான தியாகங்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று(08) பத்தரமுல்லை போர் வீரர் நினைவுத்தூபியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், தாய்நாட்டிற்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த துணிச்சலான போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், இராணுவத் தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் போர் வீரர்கள் நினைவுதூபியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *