2025/26 பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான பசளை மற்றும் இரசாயனங்களினை உறுதிப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி விடயம் தொடர்பாக, 29.09.2025 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தின் போது விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோர்க்கைக்கு அமைவாக பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான பசளை மற்றும் பூச்சி நாசினிகள் போதுமான அளவில் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் முகமாக எமது மாவட்டத்தில் பசளை மற்றும் பூச்சி நாசினிகளின் விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களுடனான கலந்துரையாடலாக குறித்த கலந்துரையாடல் அமைந்தது.
தேசிய உர செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


