அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் 33வது ஆண்டு மே தின கூட்டம் நாளை(01) கல்முனை தமிழர் கலாசார மண்டபத்தில் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
இக்கூட்டமானது அதன் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் ஊழியர்களின் நலன் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான விசேட உரைகள் இடம்பெற உள்ளதுடன் சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

