இலங்கை பெண் கரேஸ்மா ஹிப்ஹாப் ஆதி இசையில் பாடல் பாடியுள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக, பாடகராக, நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் படங்களுக்கு இசையமைப்பது, பாடல் பாடுவது, நடிப்பது என பல திறமைகளைக் காட்டி வருகிறார்.

 

தற்போது இவரது இசையில் இலங்கை பெண் கரேஸ்மா பாடல் பாடியிருக்கும் தகவல் வெளிவந்துள்ளது.

 

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தம்பதிக்கு பிறந்தவர் தான் கரேஸ்மா.

 

லண்டனில் பிறந்த இவர் தற்போது சிறந்த பாடகியாக வளர்ந்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில் லன்ட் ஒப் ஸ்பைஸ்Land Of Spice என்ற பாடலை பாடியிருக்கிறார்.

 

இந்த பாடல் நாளை(01) படு மாஸாக வெளியாகவுள்ள நிலையில் இப்பாடல் பாடியது குறித்து கரேஸ்மா மனம் திறந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *