தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசுவமடு மாமிச வாணிபம் ஒன்றில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட 50 கிலோவுக்கும் அதிகமான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மாட்டு இறைச்சி மக்கள் பாவனைக்கு உகந்தது அல்ல என்னும் குற்றச்சாட்டில் சுகாதார பரிசோதகரின் சிபாரிசு மற்றும் கால்நடை வைத்தியரின் சிபாரிசு என்பவை இல்லாத காரணத்தினால் சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றம் நீதிமன்றில் நாளை(01) முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.