களுத்துறையில் அதிகபட்ச மழை வீழ்ச்சி பதிவு

இன்று(25) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் களுத்துறையின் நேபொட பகுதியில் அதிகபட்ச மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி 121.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
களுத்துறையின் வோகன் எஸ்டேட் பகுதியில் 111 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், மாதம்பே பகுதியில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இரத்மலானை பகுதியில் 108.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *