தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெறும் சர்வதேச கூடைப்பந்தாட்டப் போட்டிக்காக மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினர் நேற்று(24) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு பிரயாணித்தனர்.
தாய்லாந்தில் 24 முதல் 27 வரை இலங்கை, பூட்டான், மாலைதீவு, தாய்லாந்து ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்குபற்றும் இந்த சர்வதேச கூடைபந்தாட்ட போட்டி இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கையில் இருந்து மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி அணியும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணி ஆகிய இரு அணிகளும் மாவட்ட மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் மட்டுமே இரு கல்லூரிகளின் அணிகளும் தெரிவு செய்யப்பட்டன.
இதனடிப்படையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி அணியினர் தாய்லாந்துக்கு நேற்று இரவு விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

