பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால பூநகரி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது பூநகரி மடத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின் அமைச்சர் அங்குள்ள மக்களோடு கலந்துரையாடினார்.
இவ் விஜயத்தின் போது அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


