கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்குச் சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று(29) விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில் விடுவிப்புக்கான ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரனிடம் இன்று மாவட்ட செயலகத்தில் வைத்து இராணுவத்தினர் கையளித்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

