பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரணைமடு குளத்தில் வாழ்வாதாரமாக நன்னீர் மின்பிடியில் ஈடுபடும் இரண்டு மீனவ சங்கங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

