புளியம்பொக்கணை கிராமத்திற்கு செல்கின்ற வீதி புனரமைப்பு

1.3 கிலோமீற்றர் அமைச்சர் இராமலிங்கம்  சந்திரசேகரன் கிளிநொச்சி மாவட்டத்தில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து புளியம்பொக்கணை கிராமத்திற்கு செல்கின்ற வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர்  கண்டாவளை பிரதேச செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த வீதியானது கிலோமீற்றர் தூரம் கொண்ட காப்பற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கு 5.5 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளது.

வடமாகாணத்திற்கு  குறித்தொதுக்கப்பட்ட நிதியில் குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *