கொட்டகலை தமிழ் மகா வித்தியாய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் திருமதி எஸ்.கமலதர்ஷினி தலைமையில் நேற்று(30)  பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 2 இன் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஜெகதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக திம்புள்ள, பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபேவர்தன, கொட்டகலை தபால் நிலைய அதிபர் திருமதி தேவகி, கொட்டகலை இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி காயத்ரி ஞானப்பிரகாசம், ஹரிங்டன் தமிழ் வித்தியாலய அதிபர் திருமதி ராஜேஸ்வரி, ஆசிரிய ஆலோசகர்கள் மு.ரவீந்திரன், யு.மகேஸ்வரி, வளவாளர் ஸ்டிபன் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்து மாணவர் தலைவர்களுக்கும் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *