அநுராதபுரம், கல்னேவ, தியபெட்டியாவ பிரதேசத்தில் மூன்று துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்னேவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போர் 12 ரக துப்பாக்கி ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

