இரண்டு ஆற்றுச்சருக்கைகள் வடக்கு ஆளுநரால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

மழைக்காலங்களில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்ட வவுனியா மாவட்டத்தின் பிரமனாலன்குளம் – பரப்புக்கடந்தான் வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக அமைக்கப்பட்ட இரண்டு ஆற்றுச்சருக்கைகள் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் இன்று காலை (01) மக்கள் பாவனைக்கு கையளித்தார்.

 

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில், ரூ. 45.49 மில்லியனில் இந்த இரண்டு ஆற்றுச்சருக்கைகளும் முழுமையாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா மாவட்ட அலுவலகத்தின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

 

90 மீற்றர் நீளம், 4 அடி விட்டமுடைய 12 கற்காரைக் குழாய்கள் கொண்டமைந்த ஆற்றுச்சருக்கை 29.63 மில்லியன் ரூபாவிலும், 100 மீற்றர் நீளம், 3 அடி விட்டமுடைய 5 கற்காரைக் குழாய்கள் கொண்டமைந்த ஆற்றுச்சருக்கை 15.86 மில்லியன் ரூபாவிலுமாக இருவேறு ஒப்பந்தகாரர்கள் ஊடாக உரிய காலப்பகுதியினுள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் திருமதி அபிராமி, வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் கௌசிகன், நிறைவேற்று பொறியியலாளர் வவுனியா மற்றும் மன்னார், தொழில்நுட்ப உத்தியோகத்தர், கிராம அலுவலர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *