குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில், நேற்று திங்கட்கிழமை (03) பொலிஸ் போதைப்பொருள் பணியக கட்டுநாயக்க விமானநிலைய துணைப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 02 கிலோ கிராம் 79 கிராம் குஷ் ரக போதைப்பொருள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கொழும்பு 12 ஐ சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதைப்பொருள் பணியக விமானநிலையப் பிரிவு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

