திருகோணமலை உட்துறைமுக வீதியில் வேனும் – முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் சென்ற பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று(04) மதியம் இடம்பெற்றுள்ளது.
உட்துறைமுக வீதியின் வழியே நகர்ப்பகுதியை நோக்கிப் பயணித்த அரச திணைக்கள வாகனம் ஒன்று வெலிங்டன் அடை வீதிக்கு திரும்ப முயற்சிக்கையிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த வேன் அப்பகுதியில் நடந்து சென்ற பெண்ணின் மீது மோதி அருகில் உள்ள வடிகானினுள் விழுந்துள்ளது.
காயமடைந்த பெண் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

