கவிஞர் நிஷேயின் “காதோரமுத்தங்கள் ” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணையைச் சேர்ந்த கவிஞர் நிஷே எழுதிய “காதோரமுத்தங்கள் ” எனும் காதல் சார்ந்த கவிதை நூல் 07 ம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு ஜே ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.

 

ஒரு ஆண் பெண் மீது கொண்டுள்ள காதல், அவள் மீதான தீரா அன்பு, காதலியின் ஸ்பரிசம், காதலும் களவும், காதலர்களின் பிரிவு, காதலியின் பிரிவினால் ஏற்படும் காதலனின் பரிதவிப்பு, பிரிவாற்றமை, காதலி மீதான காதலனின் ஏக்க உணர்வு போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு எக் கவிதை நூல் அமையப்பெற்றுள்ளது.

 

இந் நிகழ்விற்கு புத்தக நேயர்கள், நண்பர்கள், கவி புனைபவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *