மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சூழல் பொது வைத்தியசாலையின் கீழ் குத்தகை அடிப்படையில் இயங்கும் சிற்றூண்டிச் சாலையில் தொடர்ச்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் நிலவுவதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மன்னார் நகரசபை சுகாதார குழு உறுப்பினர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு குறைபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக மனித கழிவுகள் சிற்றூண்டிசாலை வளாகத்தில் காணப்பட்டமை, கழிவு நீர், மலக்கழிவுகள் திறந்த பகுதியில் விடப்பட்டமை, அதிகளவான இலையான்கள், துர்நாற்றம், ஒழுங்கற்ற கழிவுகற்றல், நுளம்பு பெருக்கத்துக்கு சாதகமான சூழல், கழிவு நீர் வாய்க்கால்களில் புழுக்கள், உணவுப் பொருட்கள் ஒழுங்கான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை, அழுக்கான சமையலறை, கழிப்பறை தொட்டிகள் மூடப்படாமை உள்ளடங்களாக பல்வேறு குறைபாடுகள் இணங்காணப்பட்டது.
இவ்வாறான நிலையில் குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

