வடமாகாண சதுரங்க போட்டியில் சாள்ஸ் மகா வித்தியாலய மாணவிகள் பதக்கம்

விகே விளையாட்டு அக்கடமியினால் நடாத்தப்பட்ட வடமாகாண ரீதியான சதுரங்க சுற்றுப்போட்டியில் புனித சாள்ஸ் மகா வித்தியாலய மாணவிகள் மூவர் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

விகே விளையாட்டு அக்கடமியால் வடமாகாண ரீதியான சதுரங்க சுற்றுப் போட்டி கடந்த 05ஆம் திகதி யாழ் வைத்தீஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் யாழ் புனித சாள்ஸ் மகா வித்தியாலய மாணவிகள் முதன் முறையாக பங்கு பற்றி பெண்களுக்கான திறந்த வயது பிரிவில் ஜெ.ஜெனிஷா 6 இடத்தினையும், ஜெ. ஜெபிஷா 7 இடத்தினையும் மற்றும் இ. மதுஷா 8 ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டு பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *