1211 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூவர் கைது

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் கடந்த 08 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 1211 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா கடந்த 08 ஆம் திகதி இரவு நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் ஓலைதொடுவாய் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்ட போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் கல்பிட்டியின் தொரடி மற்றும் ஜனசவிபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மதுவரி சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *