எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 9 இலட்சத்து 32 ஆயிரத்து 855 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என இரத்தினபுரி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கே.ஜீ.எஸ். நிஷாந்த தெரிவித்தார்.
இன்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாநகர சபை பலாங்கொடை நகர சபை, எம்பிலிபிட்டிய நகர சபை உள்ளிட்ட மேலும் 14 பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய இவர்கள் வாக்களிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.