மன்னாரில் காற்றாலை அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 100 ஆவது நாளை எட்டிய நிலையில், பொதுமக்கள் நேற்று தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக் குழுவின் ஏற்பாட்டில், குறித்த தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்றிரவு ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

