பிரபல உணவகமொன்றில் நேற்று வாங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உணவகம் அமைந்துள்ள அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மதிய சாப்பாட்டிற்காக குறித்த உணவகத்திலிருந்து ஐந்து உணவுப்பொதிகளை வாங்கி சென்றுள்ளார்.
சாப்பிடுவதற்காக பொதியை திறந்த போது, மீன் பொரியல் உணவிற்குள் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் குறித்த நபர் உடனடியாக சுகாதார பரிசோதகருக்குத் தகவல் வழங்கினார்.
அவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்துள்ளனர்.

