கிளிநொச்சியில் பொருத்தமற்ற வகையில் குடிநீர் விநியோகம்; பொது மக்கள் கவலை 

கிளிநொச்சி மாவட்டத்திற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற குழாய் வழி குடிநீரானது  ஒரு பகுதி பிரதேசத்திற்கு பொருத்தமற்ற வகையில் காணப்படுகிறது என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சியின் நகர், பரவிபாஞ்சான், திருநகர், பரந்தன் மற்றும் பூநகரி போன்ற பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நீரானது சேற்று நீரின் நிறத்திலும் மணத்திலும் காணப்படுகின்றது.

குழாய் வழி நீரையே குடிநீர் உட்பட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகின்ற தாம் இதனால் பெரிதும் சிரமப்படுவதாகவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *