அத்துமீறி நடைபெறும் கல்குவாரி நடவடிக்கைகள் உடனடியாக மூடப்படும் – தவிசாளர்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் அனுமதி இன்றி அத்துமீறி நடைபெறும் கிரவல் மற்றும் கல்குவாரி நடவடிக்கைகள் உடனடியாக மூடப்படும் என பிரதேச சபை அறிவித்துள்ளது.
பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுக்கரசு வெளியிட்ட அறிவிப்பில், அனுமதி இன்றி இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வோர் மீது உடனடி சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது அனுமதி இன்றி செயல்படுபவர்கள் இரண்டு நாட்களுக்குள் பிரதேச சபையிடம் தேவையான அனுமதிகளைப் பெற வேண்டுமெனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபை, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *