கிளிநொச்சி கல்லாறில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

நேற்று(12) இரவு 11:50 மணியளவில் பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் வீட்டின் பின் பகுதியில் இருந்து 26கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இவ் மீட்பு நடவடிக்கையானது நேற்று புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் போத குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவ் விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *