தமிழக அரசியல்வாதியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சார்பில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் கிட்டு பூங்காவில் இன்று மணிக்கு நடைபெறும் ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்யின் ஆரம்ப விழாவில் பங்கேற்பதற்காகவே தொல் திருமாவளவன் யாழ்ப்பாணம் வந்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நேற்று மதியம் வருகை தந்த தொல் திருமாவளவனை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

