கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்லாறு கிராமத்தின் அபிவிருத்தி முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல், சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து அப்பகுதியில் வாழும் மக்களுக்கு வேறு நிரந்தர தொழில்களை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்தும் முற்று முழுதாக விடுபட முடியும்.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சிலர் பொது சேதங்களை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல்கள் காணப்படுகிறது.
இது தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் எனவே சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சுயமாக நிரந்தர வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொழில் ஒன்றினைப் பெற்றுத் தருவதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னிற்பதாகவும் எனவே இவ்விடயம் தொடர்பாக தொடர்புடையவர்கள் குற்றச்செயலர்கள் ஈடுபடுவதையும் சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரன் தலைமையில் கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர், பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவத்தினர், திணைக்கள அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், கிராமசேவையாளர், பாடசாலை முதல்வர் மற்றும் கிராம மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

