கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு 

மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று(16) கிளிநொச்சி மாவட்டத்தின் புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் பணிக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

மாவீரரை பெற்றெடுத்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் மாவீரர் பொதுப்படம் விசுவமடு சந்தியிலிருந்து மங்கள வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டது.

அதன் பின் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வணக்க நிகழ்வுகள் மற்றும் பெற்றோர்கள் உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு என்பன இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *